ரஷ்யா மற்றும் உக்‍ரைன் நாடுகள் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் - போரினால் ஏற்படும் இழப்புக்‍களைத் தவிர்க்‍க இந்தியா வலியுறுத்தல்

Sep 23 2022 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்‍ரைன் போரை முடிவுக்‍குக்‍ கொண்டு வர இருதரப்பையும் இந்தியா கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்‍காவின் நியூயார்க்‍ நகரில் நடைபெற்ற, ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்தியாவும் கூட்டத்தில் பங்கேற்றது. ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அந்தந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் பங்கேற்றார். இதே போல் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லவ்ரவ், உக்‍ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரியோ குலேபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய போது, உக்‍ரைன் போரை உடனடியாக முடிவுக்‍குக்‍ கொண்டு வர, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தினார். உக்‍ரைன் போரினால் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும் அவர் அப்போது மேற்கோள் காட்டினார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியதையும் அவர் அப்போது சுட்டிக்‍காட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00