டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் கட்டப்படும் - சவுத் பிளாக் பகுதியில் அமைக்க ஏற்பாடு
Oct 6 2022 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 360 கோடி ரூபாய் செலவில், புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக, 360 கோடி ரூபாய் செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்துடன் கூடிய வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது. சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லம் அருகே பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமையவுள்ளது. பிரதமரின் புதிய இல்லம், தாராஷிகோ சாலையில் இரண்டு தளங்களைக் கொண்டதாகவும், புதிய குடியிருப்பு வளாகத்தில் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல்தளம், விருந்தினர் இல்லம் உள்ளிட்டவை அமையவுள்ளன.