அருண் கோயலை அவசர அவசரமாக நியமித்தது ஏன்?.. மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Nov 24 2022 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் ஆணையர் பதவி 6 மாதமாக காலியாக இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, 24 மணி நேரத்தில், அவசர அவசரமாக, அருண் கோயலை எப்படி தேர்தல் ஆணையராக நியமித்தீர்கள் என மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்‍கள் மீது நீதிபதி கே.எம். ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த 18-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. வழக்‍கின் நேற்றைய விசாரணையின்போது, புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அந்த கோப்புகளை பார்த்த நீதிபதிகள், மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கடந்த 18-ம் தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம்... அதே நாளில் நீங்கள் கோப்பை நகர்த்துகிறீர்கள்... அதே நாளில் நான் அவருடைய பெயரைப் பரிந்துரைக்கிறேன் என்று பிரதமர் கூறுகிறார்... ஏன் இந்த அவசரம்? என்று நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார்.

இந்த தேர்தல் ஆணையர் பணியிடம், கடந்த மே 15-ம் தேதி முதல் 6 மாதமாக காலியாக இருந்தபோது, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பினார். ஒரே நாள் செயல்முறை, அதே நாள் அனுமதி, அதே நாள் விண்ணப்பம், அதே நாள் நியமனம் என மின்னல் வேகத்தில் இதை செய்ய காரணம் என்ன? என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, உரிய நடைமுறைகளுக்கு உட்பட்டே நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00