மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவிப்பவர்களை மீட்கும் இந்திய அரசு : இதுவரை 370 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தகவல்

Nov 25 2022 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வேலை கிடைக்‍கும் எனச் சென்று மோசடியில் சிக்‍கிய 300க்‍கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பு அலுவலர் Arindam Bagchi, அதிக சம்பளம் கிடைக்‍கும் என ஏமாற்றப்பட்டு தாய்லாந்து, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்‍கு இந்தியா மற்றும் வேறு சில நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அழைத்துச் செல்லப்பட்டு மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில் மியான்மரில் சிக்‍கிய 200 பேரில் 153 பேர் ஏற்கெனவே இந்தியாவுக்‍கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களையும் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 370 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00