டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை - பா.ஜ.க. 100க்‍கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

Dec 7 2022 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்‍குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

250 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. 50 சதவீத வாக்‍குகளே இந்த தேர்தலில் பதிவானது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெற்று வருகிறது. வாக்‍கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முடிவுகளை நேரடியாக தெரிந்துகொள்ள "நிகம் சுனாவ் டெல்லி" என்ற மொபைல் ஆப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதனிடையே, வாக்‍கு எண்ணிக்‍கையின் தொடக்‍கத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. 10 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதாகவும், 6 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00