குடியரசுத்தலைவர் உரை பாஜகவின் தேர்தல் உரை போல் உள்ளது : பாஜக மீது காங். எம்.பி. சசிதரூர் விமர்சனம்
Jan 31 2023 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவரின் உரையின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை பாஜக தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை ஆனால், இன்று அவர் வாசித்த உரை பாஜகவிற்கு துதிப்பாடும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டார். இது தேர்தல் பிரசார உரை போல் உள்ளதாக விமர்சித்த சசிதரூர், பாஜக செய்ய தவறிய விசயங்கள் மட்டுமே அதில் விடுபட்டதாக தெரிவித்தார்.