இந்தியாவில் 64 சதவீத இந்தியர்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளே இல்லை : புதிய ஆய்வு முடிவில் தகவல்

May 25 2023 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் 64 சதவீத மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இல்லை என புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்கம் மற்றும் எண்ணெய் வாங்கப்பட்டு சேமிப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், லோக்கல் சர்க்கிள் எனும் தனியார் அமைப்பு ஒன்று நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது.

நாட்டில் உள்ள 341 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் ஆய்வில் கலந்து கொண்ட நிலையில், அதன் முடிவுகளை லோக்கல் சர்க்கிள் அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், 22 சதவீதம் பேர் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பு கூறியுள்ளது.

57 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 64 சதவீதத்தினரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும், 15 சதவீத மக்கள் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

7சதவீதத்தினர் 40 ஆயிரம் ருபாய் வரை வைத்துள்ளதாகவும், 6 சதவீதத்தினர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளதாகவும், 2 சதவீதத்தினர் 10 லட்சம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளதாகவும், ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக லோக்கல் சர்க்கில் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00