நடப்பு நிதியாண்டில் இதுவரை 14 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரி வசூல்... கடந்த ஆண்டு வரி வசூலை விட இந்த ஆண்டு 19.4% அதிகரிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்
Jan 12 2024 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரியாக 14 லட்சத்து 70 ஆயிரம் கோடி வசூலாகி உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த தொகை முழு ஆண்டு இலக்கில் 81 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 19.4 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் மொத்த கார்ப்பரேட் வருமான வரி வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாகவும், தனிநபர் வருமான வரி வளர்ச்சி விகிதம் 26.1 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.