அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி சத்தீஸ்கரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு... கடவுள் ராமரை தரிக்க செல்லும் பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகிய செலவுகளை மாநில அரசே ஏற்கும் என அறிவிப்பு

Jan 12 2024 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி வரும் 22-ம் தேதி சத்தீஸ்கரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், கடவுள் ராமரை தரிக்க சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு வாராந்திர இலவச ரயில் பயண சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், ராம பக்தர்களுக்கான தங்குமிடம் உணவு ஆகிய செலவுகளை சத்தீஸ்கர் மாநில அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். மேலும், ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று, சத்தீஸ்கர் முழுவதும் நதிக் கரையோரங்களில் மாலை நேர கங்கா ஆரத்தி நடைபெறும் எனவும் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00