பழம்பெரும் இந்தி நடிகர் விநோத் கண்ணா மும்பையில் காலமானார் - அவருக்கு வயது 70

Apr 27 2017 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பழம்பெரும் இந்தி நடிகர் விநோத் கண்ணா மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விநோத் கண்ணா, கடந்த 1968-ம் ஆண்டு இந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். Mere Apne படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விநோத் கண்ணா, தொடர்ந்து, Mera Gaon Mera Desh, Gaddaar, Jail Yatra, Inkaar, Amar Akbar Antony உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். இடையில் சில காலம் நடிப்புத் தொழிலை நிறுத்தியிருந்த விநோத் கண்ணா, 1980-களில் வெளியான Insaaf, Satyamev Jayate போன்ற படங்களில் மீண்டும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். ஓஷோ ரஜினீஷை தனது ஞானகுருவாக பின்பற்றிய விநோத் கண்ணா, பாலிவுட் திரையுலகில் தர்மேந்திரா, ராஜேஷ்கண்ணா, ஷமிக் கபூர் வரிசையில் பிரபல நடிகராக திகழ்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விநோத் கண்ணா புற்றுநோய் காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி விநோத் கண்ணா இன்று உயிரிழந்தார். விநோத் கண்ணாவுக்கு கவிதா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00