பாகிஸ்தானில் இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் - குல்பூஷன் ஜாதவ்வின் உடல் நிலைகுறித்த சான்றிதழை அளிக்க இந்தியா வலியுறுத்தல்

Apr 27 2017 8:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் உடல்நிலை குறித்த சான்றிதழை அளிக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், அஃப்கனிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று, உளவு பார்த்ததாகக் கூறி, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரை விடுதலை செய்யகோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து, இந்தியா சார்பில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர், மேல் முறையீட்டு மனுவை அந்நாட்டு வெளியுறவுச் செயலாளரிடம் அளித்தார். ஆனால், தூதரக ரீதியிலான இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் நிராகரித்தது. இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ்வின் உடல்நிலை குறித்த சான்றிதழை அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00