PAN கார்டை ஆதார் அடையாள அட்டையுடன் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Apr 28 2017 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

PAN கார்டை ஆதார் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு எதிராகவும், பான் கார்டு பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அரசின் நலத்திட்டங்களை பெற பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண் பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்மூலம், தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான இந்தியக் குடிமகனின் உரிமை, மீறப்படுவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. போலியான ஆவணங்களின் பேரில், ஒருவரே பலரது பெயர்களில், PAN கார்டுகளைப் பெற முடிவதாகவும், எனவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது. வருமான வரி செலுத்த பயன்படுத்தப்படும் பான் கார்டு எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் பான் எண் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்த மத்திய அரசு, வருமான வரி தாக்கல் செய்யமுடியாது என்றும் கூறியிருந்தது. மேலும் புதிய பான் கார்டை வாங்குவதற்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00