தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் தந்தை வேண்டுகோள்

Apr 28 2017 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், தாங்கள் தொடர்ந்து தங்களது செல்வங்களை இழக்க நேரிடும் என்றும் ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் தந்தை மிகுந்த உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே, Panzgam பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, ராணுவ வீரர்களும் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில், ராணுவ தரப்பில் 24 வயதே ஆன, கேப்டன் Ayush Yadhav உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர். 7 வீரர்கள் குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களை ஒழிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படியில்லை என்றால், தாங்கள் தங்களது செல்வங்களை தொடர்ந்து இழக்க நேரிடும் என்றும், குப்வாரா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஆயுஷ் யாதவின் தந்தை உருக்கமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், வீரர்களின் உயிர்தியாகத்தை மதிப்பதாகவும், அவர்களின் தியாகம் வீண்போக விடமாட்டோம் என்றும் ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சர் திரு. Nirmal Singh தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களுக்காக பாகிஸ்தான் கண்டிப்பாக வருந்தும் நிலை ஏற்படும் என்றும், அவர்கள் வழியிலேயே தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00