தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் வலுக்கும் போராட்டம் - ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலாளர் ரோஷன் கிரி, உட்பட அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா

Jun 23 2017 9:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனி மாநிலக் கோரிக்கையை தீவிரப்படுத்தும் விதமான கூர்காலாந்து பிரதேச கமிட்டியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலாளர் திரு. ரோஷன் கிரி, உட்பட அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதியில் டார்ஜிலிங் உள்ளடக்கிய மலைப்பிரதேசங்களைப் பிரித்து, தனியாக கூர்காலாந்து மாநிலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி, கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா இயக்கத்தினர், கடந்த சில நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம், வன்முறை சம்பவங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனைக்கு பேசித் தீர்வுகாணுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.

கூர்கா ஜன்முக்தி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை இணையமைச்சரை சந்திப்பது என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முடிவின்படி, கூர்காலாந்து பிரதேச நிர்வாக கமிட்டியில் இருந்த கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலாளர் திரு. ரோஷன் கிரி உட்பட 45 உறுப்பினர்களும் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். தனிமாநிலம் பெறுவது ஒன்றுதான் தங்களது ஒரே செயல்திட்டம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00