இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுசேர்க்கும் வகையில் ராணுவத்தில் செயற்கைக்கோள் பயன்பாடு - கார்டோசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 13 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இந்திய எல்லைகளை தீவிரமாக கண்காணிக்கிறது ராணுவம்

Jun 26 2017 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுசேர்க்கும் வகையில் அண்மையில் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 13 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இந்திய எல்லைகளை ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு, பூமியின் பருவமாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு விதமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்களை PSLV C-38 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது.

இதில் இந்திய எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் Cartosat-2, Risat-1 மற்றும் Risat-2 செயற்கைக்கோள்களை ராணுவம் பயன்படுத்தி வருவதாகவும், அதன்மூலம் பூஜ்ஜியம் புள்ளி 6 மீட்டர் சதுரபரப்பளவிற்கு எல்லைப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க முடியும் என்றும், தற்போது ராணுவம் பயன்படுத்தி வரும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடற்படை, போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் மற்றும் நில அமைப்புகள் ஆகியவற்றில் நிகழ்நேர தகவல் தொடர்புகளை அறிய GSAT-7 பயன்படுத்தப்படுகிறது. எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை அழிக்கும் நோக்கிலான, செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே இது போன்ற ஆயுதங்களை உருவாக்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00