உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 பேரை பலிகொண்ட ரயில் விபத்து பாதையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சு : விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை

Aug 20 2017 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 பேரை பலிகொண்ட ரயில் விபத்து பாதையில், தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிஷா மாநிலம் பூரியில் இருந்து நேற்று உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கி பூரி-கலிங்கா Utkal பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் Muzaffarnagar-ல் உள்ள Khatauli ரயில் நிலையம் அருகே சென்றபோது தடம் புரண்டு இந்த ரயில் விபத்துக்குள்ளானது. அப்போது, ரயிலின் 14 பெட்டிகள் தூக்கிவீசப்பட்டதில், இடிபாடுகளில் சிக்கியும், பலத்த காயமடைந்தும் 23 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், ரயில்வே துறை அதிகாரிகளும், ஊழியர்களும் அங்கு முகாமிட்டு தண்டவாள சீரமைப்புப் பணியை துரிதமாக மேற்கொண்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் விபத்து நேரிட்டதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00