குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறைப் பயணமாக காஷ்மீர் மாநிலம் லே நகருக்கு செல்கிறார்

Aug 21 2017 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், முதல் அரசு முறைப் பயணமாக, இன்று காஷ்மீர் மாநிலம் லே நகருக்கு செல்கிறார்.

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக, திரு. ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 25-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல் அரசு முறைப் பயணமாக இன்று, காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு அவர் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ராணுவத்தின் லடாக் ஸ்கவுட் படைப்பிரிவு உள்ளிட்ட 6 படைப் பிரிவினருக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இந்நிகழ்ச்சியில், ராணுவ தளபதி விபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் லே மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கும் குடியரசுத் தலைவர் செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, லடாக் பகுதிக்கு நேற்று சென்ற ராணுவ தளபதி விபின் ராவத், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00