நாடுமுழுவதும் நவோதயா மாதிரி பள்ளிகளில் சிறுபான்மை இன மாணவிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

Aug 21 2017 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடுமுழுவதும் இயங்கி வரும் நவோதயா மாதிரி பள்ளிகளில் சிறுபான்மை இன மாணவிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 100 நவோதயா மாதிரி பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திரு.முக்தார் அப்பாஸ் நக்வி, இந்த பள்ளிகளிலும், விரைவில் தொடங்கப்படவிருக்கும் 5 உயர் கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மை இன மாணவிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்த பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளை மாதிரியாக கொண்டு செயல்படும் என்றும், இதன் மூலம் சிறுபான்மை சமுதாய மக்கள் கல்வி வளர்ச்சியில் முழுமை பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00