முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் - 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தல்

Aug 22 2017 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தலாக் நடைமுறையை 6 மாத காலத்திற்கு அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளைக்‍ கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய பெண் ஒருவர் தொடுத்த 5 ரிட் மனுக்கள் உள்ளிட்ட 7 மனுக்கள், கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது மிகவும் முக்கியமான பிரச்னை என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுகுறித்த மனுக்களை, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்தது.

அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் திரு. குரியன் ஜோசப், திரு. ஆர்.எஃப். நாரிமன், திரு. யு.யு. லலித், திரு. அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. வழக்‍கு விசாரணை முடிவடைந்த நிலையில், முத்தலாக் நடைமுறையை 6 மாத காலத்திற்கு அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளைக்‍ கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00