நவி மும்பையில் காசடி ஆற்றின் வழியே செல்லும் நாய்கள் நீல நிறமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பு : ஆற்று நீரில் மாசு ஏற்படுத்திய நிறுவனத்தை மகாராஷ்டிரா அரசு இழுத்து மூடியது

Aug 22 2017 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவி மும்பையில் உள்ள காசடி ஆற்றின் வழியே செல்லும் நாய்கள் நீல நிறமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆற்று நீரில் மாசு ஏற்படுத்திய நிறுவனத்தை மகாராஷ்டிரா அரசு இழுத்து மூடியது.

மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள காசடி ஆற்று நீரில் நனைந்த நாய்கள் தங்கள் இயல்பான நிறத்தை இழந்து, நீல நிறமாக மாறும் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து உள்ளூரில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், டூகோல் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுப் பொருட்கள் தலோஜாவில் உள்ள காசடி ஆற்றில் கலப்பதுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வாரியம் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கம்பெனியை இழுத்து மூடும்படி வாரியம் உத்தரவிட்டது. மேலும் நிறுவனத்திற்கான தண்ணீர் சப்ளையை நிறுத்தும்படி எம்.ஐ.டி.சி.க்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுமக்களும், விலங்கு ஆர்வாலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00