புதுச்சேரி அருகே பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

Aug 23 2017 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், புதுச்சேரி அருகே பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மரவள்ளி கிழங்கு மாவை கொண்டு சுமார் இரண்டு அடி முதல் 15 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. திருமூர்த்தி விநாயகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், பாகுபலி விநாயகர் என 110 விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் இரு தினங்களே உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00