நீர் மூழ்கி கப்பல்களை தாக்‍கி அழிக்‍கும் திறன்கொண்ட ஐ.என்.எஸ். ஹில்டான் போர்க்‍கப்பல் - விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையிடம் ஒப்படைப்பு

Oct 16 2017 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீர் மூழ்கி கப்பல்களை தாக்‍கி அழிக்‍கும் திறன்கொண்ட ஐ.என்.எஸ். ஹில்டான் போர்க்‍கப்பலை, விசாகப்பட்டிணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடற்படையிடம் ஒப்படைத்தார்.

நீர்மூழ்கி கப்பல்களை அழிக்‍கவல்ல போர்க்‍கப்பல்களை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இதுவரை 2 கப்பல்கள் கட்டி முடிக்‍கப்பட்டு, கடற்படையில் சேர்க்‍கப்பட்டுள்ளன. மூன்றாவதாக கட்டப்பட்ட ஐ.என்.எஸ். ஹில்டான் என்ற போர்க்‍கப்பலை விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாசீதாராமன் முறைப்படி கடற்படையில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லான்பா மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தொழில்சாலையில் தயாரிக்‍கப்பட்டுள்ள இக்‍கப்பலில் அதிநவீன ஆயுதங்களும், நீர் மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணிக்‍கும் ரேடார் கருவிகளும் இணைக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00