தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 26 பயணிகள் வாந்தி மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

Oct 16 2017 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவாவில் இருந்து மும்பைக்‍கு செல்லும் தேஜாஸ் எக்‍ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 26 பயணிகள் வாந்தி மயக்‍கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

கோவாவில் இருந்து மும்பைக்‍கு செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்களுக்‍கு ரயில்வே நிர்வாகம் மூலம் உணவு வழங்கப்பட்டது. ஆனால் இந்த உணவை உட்கொண்ட 26 பயணிகளும் சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்‍கம் ஏற்பட்டு கடுமையாக உடல்நலம் பாதிக்‍கப்பட்டனர். விஷத்தன்மை காரணமாக இச்சம்பவம் நேரிட்டது. இதையடுத்து பாதிக்‍கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டதையடுத்து, பயணிகளுக்‍கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்‍கு எடுத்துக்‍ கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக, இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் பணியாற்றி வரும் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00