உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டம்

Oct 19 2017 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அயோத்தியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ராமர், சீதை சிலைகள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமன், லட்சுமணன், சீதை வேடமணிந்த நடிகர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில பா.ஜ.க நிர்வாகி, உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளதாகவும், ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பிய பின்னர் பட்டாபிஷேகம் சூட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் அருகே உள்ள தெப்பக்குளம் புனரமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையொட்டிநேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00