வனம் அல்லாத பகுதிகளில் வளரும் மூங்கில் மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கம் : அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Nov 24 2017 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வனம் அல்லாத பகுதிகளில் வளரும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் அதிக அளவு மூங்கில் தோட்டங்களை வைத்து லாபம் ஈட்டுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவும், கொண்டு செல்லவும், அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதி உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக இருந்ததால் இந்த சட்டத்தை திருத்தி அவசர சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி வனம் அல்லாத பகுதிகளில் வளர்க்கப்படும் மூங்கிலை வெட்டவும், கொண்டு செல்லவும், அனுமதி பெறுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு வசதியாக வனம் இல்லாத பகுதிகளில் வளரும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் வனப்பகுதிகளில் வளரும் மூங்கில், வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00