சொகுசு கார் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் : நடிகர் சுரேஷ் கோபி எம்.பி. ஜாமீனில் விடுவிப்பு - நடிகை அமலா பால் ஆஜராகி விளக்கம்

Jan 16 2018 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் நடிகரும், பா.ஜ.க., எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடிகை அமலா பால் திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு விசாரணை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதற்கிடையே, சுரேஷ் கோபியின் கார் பதிவு செய்யப்பட்ட முகவரி போலி என்றும், புதுச்சேரியில் நிரந்தர வீடு இருப்பதாக அவர் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கேரள குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷ் கோபி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00