எல்லை பகுதிகளில் எதிரி படைகளை எதிர்கொண்டு இருக்கும் இந்திய வீரர்களுக்கு நவீன துப்பாக்கிகளை அவசரமாக வாங்க மத்திய அரசு அனுமதி - டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Jan 17 2018 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லை பகுதிகளில் எதிரி படைகளை எதிர்கொண்டு இருக்கும் இந்திய வீரர்களுக்கு 72 ஆயிரத்து 400 நவீன துப்பாக்கிகளை அவசரமாக வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

குஜராத் முதல் காஷ்மீர் வரை பாகிஸ்தான் படையினரையும், காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை சீனப்படைகளையும் எல்லையில் எதிர்கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு 72 ஆயிரத்து 400 நவீன துப்பாக்கிகளையும், 93 ஆயிரத்து 895 தோட்டா செட்டுகளையும் , 3 ஆயிரத்து 547 கோடி ரூபாய் செலவில் அவசரமாக வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு நவீன துப்பாக்கிகள் வாங்க தற்போது முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொள்முதல் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் தனியார்களை ஊக்குவிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00