மலையாள நடிகை பிரியா வாரியருக்‍கு எதிரான அனைத்து வழக்‍குகளுக்‍கும் தடை விதித்தது உச்சநீதிமன்றம் - புகார் அளித்த அனைவருக்‍கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Feb 21 2018 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரே பாடலில், நாடு முழுவதும் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியருக்‍கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்‍குகளுக்‍கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மலையாளத்தில் "ஒரு அடார் லவ்" படத்தில் இடம்பெற்ற "மாணிக்‍ய மலராய பூவி" பாடல் மூலம், இளைஞர்களை வெகுவாக கவர்ந்தவர் பிரியா வாரியர். அந்த பாடல் காட்சிகள், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். அதே நேரத்தில், பிரியா வாரியர் நடித்துள்ள பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் உள்ளதாகக்‍ கூறி, அவருக்‍கு எதிராக, தெலங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்‍கப்பட்டது. மேலும், அவர் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் அந்த மனுக்‍களில் கூறப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரியா வாரியர் மனு தாக்‍கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக்‍ மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது பிரியா வாரியருக்‍கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்‍குகளுக்‍கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பிரியா வாரியர் மீது எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது புகார் அளித்தவர்கள் அனைவருக்‍கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00