காஸ்மீர், உத்தரபிரேசத்தில் சிறுமிகளுக்‍கு இழைக்‍கப்பட்ட பாலியல் கொடுமைக்‍கு பிரதமர் கடும் கண்டனம் - குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்‍கப்படுவார்கள் என உறுதி

Apr 14 2018 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை மெளனம் காத்து வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று திரு. மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினரால் 17 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்‍கப்பட்டு கொல்லப்பட்டது, உள்ளிட்ட சம்பவங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இதுவரை மெளனம் காத்து வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் நாகரிக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். முழுமையாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம் மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த மாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00