கைபேசி மூலம் முன் பதிவில்லாப் பயணச் சீட்டுக்களைப் பெறும் UTS ON MOBILE செயலி - பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இரயில்வே துறை

Apr 14 2018 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரயில் பயணத்திற்கு கைபேசி மூலம் முன் பதிவில்லாப் பயணச் சீட்டுக்களைப் பெறும் UTS ON MOBILE என்கிற செயலி இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது.

கைபேசி செயலி மூலம் முன் பதிவில்லாப் பயணச் சீட்டுப் பெறும் முறை கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு முதல் இந்தச் செயலி மூலம் பயணச்சீட்டு எடுக்கும் முறை தெற்கு ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் இன்று செயல்பாட்டுக்கு வந்தது.

இந்தச் செயலியைக் google play store-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரயில்வேயின் R-Wallet, பயணச்சீட்டு முன்பதிவு மையம், IRCTC இணைய தளம் ஆகியவற்றின் மூலம் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை முன்கூட்டிச் செலுத்த வேண்டும். அந்தத் தொகையில் இருந்து பயணச்சீட்டுக்கான தொகை எடுத்துக்‍ கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செயலியின் மூலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள பகுதிகளிலிருந்து பயணச் சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கெட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00