கழக விதிமுறைகளை மீறி இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ். தரப்பினருக்‍கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது - கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதம் - தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல்

Apr 17 2018 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

விதிமுறைகளை மீறி இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ். தரப்பினருக்‍கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் வாதங்கள் முன்வைக்‍கப்பட்டுள்ளன.

இ.பி.எஸ். தரப்பினருக்‍கு விதிமுறைகளை மீறி இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு நீதிபதிகள் Sistani, சங்கீதா டிங்கரா முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. சார்பில் ஆஜரான மூத்த வழக்‍கறிஞர் திரு. கபில் சிபல், அ.இ.அ.தி.மு.க. சட்டவிதிகளுக்‍குப் புறம்பாக இ.பி.எஸ். தரப்பினர் செயல்படுவதாகவும், கழகப் பொதுச் செயலாளரின் அனுமதியின்றி மாற்றங்களை செய்துள்ளதாகவும் வாதங்கள் எடுத்துவைக்‍கப்பட்டன. விதிமுறைகளுக்‍கு மாறாக இரட்டை இலைச் சின்னம் இ.பி.எஸ். தரப்பினருக்‍கு ஒதுக்‍கப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00