கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே ராஜினாமாவை அறிவித்தார் முதலமைச்சர் எடியூரப்பா

May 19 2018 7:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நம்பிக்‍கை வாக்‍கெடுப்புக்கு முன்னரே, முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா 104 இடங்களிலும், ​காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிபெற்றன. மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரிய எடியூரப்பாவும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமியும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார். ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்‍க ஆளுநர் அழைப்பு விடுத்தன்பேரில், முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்‍கொண்டார்.

இதனை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தனர். வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பாக இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்‍க உத்தரவிட்டது.

இந்த பரபரப்புக்‍கு மத்தியில், இன்று காலை கர்நாடக சட்டப்பேரவை கூடி, எம்.எல்.ஏக்‍கள் பதவி ஏற்றுக்‍கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போபையா, எம்.எல்.ஏக்‍களுக்‍கு பதவி பிரமாணம் செய்து ​வைத்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, இறுதி மூச்சுவரை கர்நாடக மக்‍களுக்‍காக தொடர்ந்து பாடுப்படுவேன் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, வாக்‍கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு பேரவையில் இருந்து வெளியேறினார்.

பாரதிய ஜனதாவுக்‍கு பெரும்பான்மையான எம்.எல்.ஏக்‍க​ளின் ஆதரவு இல்லாதததால், எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்‍கள், ஒருவருக்‍கொருவர் கை குலுக்‍கி வாழ்த்துகளை தெரிவித்துக்‍கொண்டனர்.

இதனிடையே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை, ஆளுநர் Vajubhai Vala-வை சந்தித்து எடியூரப்பா வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00