பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு : வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

May 20 2018 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்‍கு உள்ளாகியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட மேலும் அதிகரிக்‍கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 13 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் 28 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 32 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 ரூபாய் 55 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00