கேரளாவில் இதுவரை தென்மேற்கு பருவமழை காரணமாக வீடுகள் இடிந்தும் மின்சாரம் தாக்கியும் பலியானோர் எண்ணிக்கை 53ஆக உயர்வு : முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு

Jun 17 2018 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் இதுவரை தென்மேற்கு பருவமழை காரணமாக வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் பலியானோர் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பெய்வதால் இந்த 6 மாவட்டங்களிலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்தது. இதுவரை மழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் பலியானோர் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீட்புப்பணிகளுக்‍கான தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றுள்ளனர். இதனிடையே, மீட்பு பணிகளை துரிதப்படுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00