டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 9 நாள் தொடர் போராட்டம் : துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று வாபஸ்

Jun 20 2018 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் முடிவுக்‍கு வந்துள்ளது. துணை நிலை ஆளுநர் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள், அம்மாநில தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அம்மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறி, திரு. அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11-ஆம் தேதி துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆளுநர் வீட்டு வரவேற்பறையில் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் தொடர்ந்து 9 நாட்களாக நீடித்தது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட, துணை முதலைமச்சர் திரு. சிசோடியா உள்ளிட்ட இருவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திரு.கெஜ்ரிவாலுக்கு, துணை நிலை ஆளுநர் ஒரு கடிதம் எழுதினார். அதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினரை உடனே சந்தித்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00