ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின்போது 4 தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை - ஒரு தீவிரவாதியை சுற்றுவளைத்து பிடித்தனர் - முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக ஸ்ரீநகர், அனந்த்நாக் மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்

Jun 22 2018 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அறிவித்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் எல்லையில், ராணுவத்திற்கு உதவியாக கமாண்டோ வீரர்களும், குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சுமார் 210 தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த தாக்குதலின்போது உயிர் சேதத்தை குறைப்பதற்காக, ராணுவத்திற்கு உதவும் வகையில், என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்களையும், குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்களையும், மத்திய அரசு, காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதிநவீன ஆயுதங்கள், ரேடார் கருவிகள் போன்றவற்றுடன் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள கமாண்டோ வீரர்கள் அங்குள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற உள்ளதை குறிக்கும் வகையில் எல்லை அருகே கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்‍ மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்‍கும், தீவிரவாதிகளுக்‍கும் இடையே நடந்த துப்பாக்‍கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்‍களில் இருவரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அனந்த்நாக்கின் சிரிகுப்வாரா பகுதியில் பதுங்கியிருந்த மற்றொரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் உயிருடன் பிடித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து துப்பாக்‍கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக்‍ மாவட்டத்தில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00