தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Aug 10 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் திரு. ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கோரி, அம்மாநில காவல் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்முவில் உள்ள திரு. ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் கடந்த 4-ம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருட்களை சூறையாடிய வாலிபர் சையத் முப்ராத் ஷா என்பவர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எதற்காக அவர் ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குச் சென்றார்? என்பது இதுவரை தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவரின் பின்னணி குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தை, ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர், ஜம்மு பிராந்திய காவல்துறை ஐ.ஜி. ஆகியோர், ஒரு மாத காலத்துக்குள் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00