லக்னோவில் மணமகனுக்கு மொட்டை அடித்து நூதன தண்டனை - வரதட்சணை கேட்டதை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை

Oct 22 2018 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணத்துக்கு தடை போட்ட மணமகனுக்கு அரை மொட்டையடித்து அவமானப் படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மங்கள் சிங், திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி வேண்டும் என மணமகள் வீட்டாரிடம் கேட்டுள்ளார். இதைக் கொடுக்க பெண் வீட்டார் மறுத்துள்ளனர்.

இதுபற்றிய தகவலை அறிந்த சிலர், இதற்கு பழிவாங்கும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் இவருக்கு அரை மொட்டை அடித்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து தெரிவித்த மணப்பெண்ணின் தாய், திருமணத்திற்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் தங்களிடம் மணமகன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி கேட்டதாக கூறினார். ஆனால், தங்களால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியாது என்று கூறியதாகவும், இதன் காரணமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணமகன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மணமகனுக்கு யார் மொட்டையடித்தது என்ற விவரம் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00