மேற்குவங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின் ரத யாத்திரைக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்ட விவகாரம் - நீதிமன்ற உத்தரவையடுத்து பயணத்தை ரத்து செய்தார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

Dec 7 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவின் ரத யாத்திரைக்‍கு, கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், அக்‍கட்சியின் தலைவர் திரு.அமித்ஷா தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மேற்குவங்கத்தில் 3 ரத யாத்திரைகளை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் யாத்திரை கூச்பிகாரில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த யாத்திரையால் அங்கு கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக்‍ கூறி, அம்மாநில அரசு அதற்கு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அம்மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி வழங்கக்‍கூடாது என முறையிட்டார். இதனை ஏற்ற உயர்நீதிமன்றம், யாத்திரைக்‍கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

எனினும் திட்டமிட்டபடி ரத யாத்திரை நடைபெறும் என்றும், இதில் தான் பங்கேற்கப்போவதாகவும் அமித்ஷா கூறியிருந்தார். இதனால் மேற்குவங்க அரசியலில் பரபரப்பு நிலவியது. இந்த சூழ்நிலையில் திரு.அமித்ஷா தனது மேற்குவங்க பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00