நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி

Dec 7 2018 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக ஆளும் அரசின் பரிந்துரையில்லாமல் பா.ஜ.கவை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்தது. இவர்களது நியமனத்தை சபாநாயகர் வைத்தியலிங்கம் ஏற்க மறுத்துவந்த நிலையில், பா.ஜ.க நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தததை தொடர்ந்து, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரும் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, விதிகளுக்குட்பட்டே புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்ததாகவும், சட்ட விதிகளுக்குட்பட்டே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். உச்சநீதின்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை அளித்திருப்பதன் மூலம், நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00