சபரிமலையில் 144 தடை உத்தரவை விலக்‍கக்‍ கோரி கேரள சட்டப்பேரவையில் எதிர்க்‍கட்சிகள் கடும் அமளி - நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

Dec 10 2018 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்‍கக்‍கோரி, கேரள சட்டப்பேரவையில் எதிர்க்‍கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்‍கப்பட்டது.

கேரளாவில், புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. எனினும், அங்கு பெண்கள் வழிபட, பாஜக மற்றும் இந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. சபரிமலையிலும் போராட்டங்கள் நடைபெற்றதால், அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனை உடனடியாக நீக்‍கக்‍கோரி கேரள சட்டப்பேரவையில் எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் இன்று குரல் எழுப்பினர். சபாநாயகரை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் கூச்சல் குழப்பமும், கடும் அமளியும் நிலவின.

மேற்கொண்டு அவையை நடத்தமுடியாமல் போனதால், நாள்முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00