நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறுகிறது - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Mar 11 2019 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்டமாக, 20 மாநிங்களில் உள்ள 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் 97 தொகுதிகளிலும், ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டமாக 14 மாநிலங்களில், 115 தொகுதிகளிலும், ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில், 71 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டமாக, 7 மாநிலங்களில் 51 தொகுதிகளிலும், மே 12-ம் தேதி ஆறாம் கட்டமாக, 7 மாநிலங்களில் 59 தொகுதிகளிலும், மே 19-ம் தேதி ஏழாம் கட்டமாக, 8 மாநிலங்களில் 59 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், அரியான, இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், அந்தமான், தாதர் நாகர்வேலி, டாமன் டையூ, லட்சத்தீவு, புதுடெல்லி, புதுச்சேரி, சண்டிகார் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00