ஒடிஷாவில் தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியமைக்கிறார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்

May 24 2019 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் கட்சி தலைவர் திரு.நவீன் பட்நாயக் மீண்டும் முதலமைச்சராகிறார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி அவர் சாதனை படைத்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 147 சட்டமன்றத் தொகுதிகளில் 113 இடங்களில் பிஜு ஜனதாதளம் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கிறது. 22 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், பிஜு ஜனதாதளம் கட்சி 112 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. 1997ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஒடிசா முதலமைச்சராக பதவி ஏற்ற திரு.நவீன் பட்நாயக், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 21 இடங்களில் பிஜு ஜனதாதளம் 14 இடங்களிலும், பாரதிய ஜனதா 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00