மத்தியில் அமையும் புதிய அமைச்சரவை தொடர்பாக பிரதமர் மோடி தீவிர ஆலோசனை - பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சேர்க்‍கவும் திட்டம்

May 24 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பிரதமர் திரு.நரேந்திர மோடி பரிசீலித்து வருவதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் திரு. அமித்ஷாவை சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்‍களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 350 இடங்களைப் பெற்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்‍கிறது. இதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை மறுநாள் குடியரசுத் தலைவரை சந்தித்து உரிமை கோர உள்ளார். புதிய அமைச்சரவையில் யாரை எல்லாம் சேர்த்துக்கொள்வது என்பது குறித்தும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு வித்திட்ட திரு.அமித்ஷாவை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது குறித்தும் திரு.மோடி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கேபினட் அந்தஸ்துள்ள முக்கிய இலாகா வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. திரு.மோடி தலைமையில் அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்‍கப்படலாம் என்றும் எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00