பாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்

Aug 23 2019 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.யாதவ், தனக்‍கு பாதுகாப்பு கோரி, உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, லக்‍னோ சிறப்பு நீதிமன்றத்தை, உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தியது. பாஜக மூத்த தலைவர்கள் திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான இந்த வழக்‍கை விசாரித்து வரும், நீதிபதி திரு.எஸ்.கே.யாதவ், வரும் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவரின் பதவிக்‍காலம் நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.கே. யாதவ், தனக்‍கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான வழக்கை விசாரிப்பதால் கீழமை நீதிபதிக்கு பாதுகாப்பு அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு, உத்தரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00