காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் - தேவகவுடா, சித்தராமையா வார்த்தை மோதல்

Aug 24 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது குறித்து காங்கிரஸ் தெரிவித்த புகாருக்‍கு உரிய நேரத்தில் விளக்‍கம் அளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான திரு. தேவகவுடா, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையா தான் காரணம் என்றும், எடியூரப்பா முதலமைச்சராக வேண்டும் என்றே சித்தராமையா விரும்பியதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ஆதாரமின்றி அரசியல் காரணங்களுக்காக தேவகவுடா தன் மீது குற்றம் சாட்டுவதாக விளக்கமளித்தார். கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு தேவகவுடா மற்றும் அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா ஆகியோரே காரணம் என்றும் சித்தராமையா தெரிவித்தார்.

இந்நிலையில், சித்தராமையாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க இது சரியான நேரம் அல்ல என்றும், உரிய நேரத்தில் இதுகுறித்து விளக்‍கம் அளிப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00