ரயில்வே துறையில் 2 கோடி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்-ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்கவும் ஆலோசனை

Aug 25 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் ரயில்வே மற்றும் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ரயில்வே துறையிடம் I.R.C.T.C மற்றும் I.R.F.C என இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன இவற்றில் உள்ள 2 கோடி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பங்கு விற்பனை நடைபெறும் என்றும் இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. I.R.C.T.C யில் உள்ள பங்குகள் விற்கப்பட்டால் மத்திய அரசின் பங்குகள் 12 சதவீதமாக குறையும். ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரையில் நிதி திரட்ட முடியும் என்றும் அதேபோல் ஐஆர்எப்சி நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 2,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் என்றும் மத்திய அரசு எதிர்பாக்கிறது.

இதைப்போலவே கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த வாரம் மத்திய அமைச்சர்கள் குழு 2வது முறையாக ஆலோசனை நடத்தவுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. இதில் 29 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00