சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கூடுதலாக ஏழரை ஆண்டுகள் நிலவை சுற்றிவரும் - இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை

Sep 22 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கூடுதலாக ஏழரை ஆண்டுகள் நிலவைச் சுற்றி வர வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் திரு.சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7 ஆம் தேதி, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் போது, அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது. அண்மையில், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் திரு. சிவன், சந்திரயான் - 2 திட்டம், 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிடப்பட்டிருந்தாலும், மேலும் ஏழரை ஆண்டுகள் நிலவைச் சுற்றி வர வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய, தேசிய அளவில் கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுனர் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது என்றுக் கூறிய அவர், முழு திருப்தியை தருகிற வகையில், ஆர்பிட்டர் தொடர்ந்து அறிவியல் சோதனைகளை செய்து வருகிறது என்றும் ‍தெரிவித்தார்.

ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன என்றும், எதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தனவோ, அந்த நோக்கங்களை அவை சரியாக செய்து வருகின்றன என்றும் திரு.சிவன் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00