மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா? - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி

Sep 23 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இடையே, தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால், கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிராவில் 288 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு, அடுத்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பேசுவதற்கு நேற்று அமித்ஷா மும்பை வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மாறாக, பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்தும், தேர்தல் வெற்றி குறித்தும் பேசிய அமித்ஷா, கூட்டணி கட்சியான சிவசேனா பெயரை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்தார். தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகள் இடையே கூட்டணி முறியும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00