கர்நாடகாவில் தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்‍கள் தொடர்ந்த வழக்‍கு - முன்னாள் சபாநாயகருக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Sep 23 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.-க்‍கள் தங்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கில், அம்மாநில முன்னாள் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசுக்‍கு எதிராக நடைபெற்ற வாக்‍கெடுப்பின்போது, கொறடா உத்தரவை மீறி வாக்‍களித்த புகாரில், 15 எம்.எல்.ஏ.க்‍கள் தகுதி நீக்‍கம் செய்யப்பட்டனர். அந்த தொகுதிகளுக்‍கு இடைத்தேர்தல் அறிவிக்‍கப்பட்டுள்ளது. ​தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்‍கள் தேர்தலில் போட்டியிடக்‍கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, எம்.எல்.ஏ-க்‍கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்‍கல் செய்திருந்தனர். தங்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்‍க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இதுதொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்க முடியாது என தெரிவித்தது. இதனை கேட்ட நீதிமன்றம், முன்னாள் சபாநாயகர் திரு.ரமேஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நாளை மறுதினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00